பள்ளிக் குழந்தைகளின் அன்றாடப் போராட்டமாக மாறிவரும் கனமான பள்ளிப் பைகள் பிரச்சனைக்கு, சிறுவர் குழு ஒன்று காட்டிய புத்திசாலித்தனமான யோசனை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் காணொளியில், ஐந்து மாணவர்கள் தங்கள் முதுகுப்பைகளை நீண்ட மூங்கில் குச்சியில் கட்டி, சுமையைப் பகிர்ந்து கொண்டு பள்ளிக்குச் செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by TV1 INDIA खबरों का नया अड्डा* (@tv1indialive)

பொதுவாக குழந்தைகள் தனிநபர் சுமையாக பள்ளிப் பைகளை சுமந்துச்செல்லும் நிலையில், இந்த மாணவர்கள் தீர்வு நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மூங்கில் மீது பைகளை சமநிலைப்படுத்தி, குழுவாகத் தங்கள் தோள்களில் ஏந்தியபடி சிரித்துக் கொண்டே நடந்து செல்லும் இந்தக் காட்சி, குழுப்பணியின் அழகிய எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.

சுமார் 14,000 லைக்குகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ தொடர்ந்து பரவி வருவதுடன், கருத்துப் பகுதியில் நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. “வா, என்ன ஐடியா!” “குழுப்பணியின் உண்மையான வரையறை இதுதான்,” எனப் பலர் புகழ்ந்துள்ளனர். “குழந்தைகளை விட யாருக்கு புதுமை அதிகம்?” என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த வளங்களிலேயே குழந்தைகள் உருவாக்கிய இந்த எளிய தீர்வு, கனமான பள்ளிப் பைகள் குறித்து நீண்ட காலமாக நடைபெற்று வரும் விவாதத்துக்கும் புதிய ஒளியைச் செல்லுத்தியுள்ளது. சிறார்களின் படைப்பாற்றலையும், பிரச்சினைக்கு எடுத்துக்காட்டாக காட்டிய நடைமுறைப் போக்கும் நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.