டெல்லி ரோகிணி பகுதியில் அதிவேகமாக வந்த எஸ்யூவி கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் முன்பக்க வாயிலை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. வைரலாகும் அந்த காட்சிகளில், வெள்ளை நிற எஸ்யூவி ஒன்று திடீரென வேகமாக வீட்டை நோக்கி பாய்ந்து, உலோகக் கேட்டை உடைத்து வீட்டின் ஹாலுக்குள் நுழைவது தெளிவாக காணப்படுகிறது. வாகனம் வீட்டின் உட்புறத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் அருகிலிருந்த சோபாவில் ஓய்வெடுத்து படுத்திருந்த வயதான பெண், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே விரைந்து வந்து பெண்ணை மீட்டனர்.
दिल्ली रोहिणी एक घर में जा घुसी तेज़ रफ़्तार बेकाबू SUV कार CCTV सामने आया
तेज़ रफ़्तार कार घर के गेट को तोड़ते हुए सीधे अंदर घुस गई घर में एक बुजुर्ग महिला लेटी हुई थी गनिमत रही बचाव हो गया घर का सारा सामान टूट गया pic.twitter.com/mp6mjUtPbg
— Lavely Bakshi 🔺 (@lavelybakshi) November 25, 2025
இந்த சம்பவம் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வரும் கவனக்குறைவான மற்றும் அதிவேக பயணம் பற்றிய கவலைகளை மீண்டும் உருவாக்கியுள்ளது. சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, 2023 ஆம் ஆண்டில் டில்லியில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 72% விபத்துகளுக்கு வேகமே காரணமாக இருந்ததாகவும், அதே ஆண்டு 1,457 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் காரை ஓட்டியவர் குறித்து அல்லது அவர்மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டிடப் பகுதிகள் பெருமளவில் சேதமடைந்த நிலையில், பெண் உயிர் தப்பியது பெரும் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.
