தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து இயக்குனர் கௌதம் மேனனுக்கு தற்போது பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் கேக் வெட்டும் போது லியோ படக்குழுவினர் உடன் இருந்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி மெயில் ஆகி வருகிறது.