கோயம்புத்தூர் கரடிமடை பிரிவு பகுதியில் குட்டி யானை ஒன்று விவசாய குளத்தில் தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது அப்போது நான்கு அடி ஆழம் கொண்ட குளத்திற்குள் தவறி விழுந்து கரையேற முடியாமல் தவித்துள்ளது. இதனை அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரிடம் விவசாயி ஒருவர் முறையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜெசிபி வரவழைக்கப்பட்டு குட்டியானை கரையில் ஏறுவதற்கு உதவும் விதத்தில் பாதை தோண்டப்பட்டது. அந்த வழியாக கரையேறிய குட்டியானை சிறிது தூரத்தில் நின்ற தாய் யானையிடம் சென்றடைந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மீட்பு பணியில் வனத்துறை அதிகாரிகள் அருண்குமார், ஐயப்பன், செல்வராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.