மேற்கத்திய நாடுகளில் சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் நம் நாட்டில் அடிமட்டளவில் கூட ஊழல் உள்ளது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொதுநல மனுவில் ஒரு அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால் ஒரு வேட்பாளர் கிரிமினல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதைக்கப்பட்டாலும் இவர்கள் அமைச்சராகவோ அல்லது மக்களவை உறுப்பினராகவோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்கிறார் என மனுதாரர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஒரு மோசமான குற்றச்சாட்டின் பேரில் கடைநிலை ஊழியராக கூட முடியாத ஒருவர் சட்டப்பேரை உறுப்பினராகவும் சட்டத்துறை அமைச்சராகவும் ஆகும் நிலை நமது நாட்டில் உள்ளது என மனதார் தெரிவித்துள்ளார். குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தேர்தல் ஆணையம் தெளிவான முடிவை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமூகத்தில் ஊழல் ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல்களுக்கு வேதனை தெரிவித்தது.

மேற்கத்திய நாடுகளில் சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவது இல்லை எனவும் நம் நாட்டில் அடிமட்ட அளவில் கூட ஊழல் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள் அதுதான் உண்மையான பிரச்சனையாக உள்ளது என தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடும் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த நிலை என்ன என்பது குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.