உக்கரைனுக்கு போலந்து ராணுவ டாங்கி கொடுத்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. உக்கரையின் மீது ரஸ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கரனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. உக்கரனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை விதித்துள்ள.

இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஊக்கரைனுக்கு ஏற்கனவே 4 டாங்கிகள் அனுப்பி வைத்துள்ளதாகவும் மேலும் ஆயுதங்களை விரைவில் வழங்க உள்ளதாகவும் போலந்து பிரதமர் கூறியிருக்கிறார்.  இந்த நிலையில் போலாந்திற்கு வழங்கி வந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை நேற்று அதிரடியாக நிறுத்தியுள்ளது. போரில் உக்கரனுக்கு ராணுவ டாங்கிகள் வழங்கியதற்கு பதிலடியாக உடனடியாக உக்ரைனுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.