இந்தியாவின் வங்கிகளை போலவே அஞ்சல அலுவலகங்களில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கு அதிக பலன்களை அளிக்கும் வகையில் இருப்பதால் மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி ஐந்து ஆண்டுகால முதலீட்டில் 5 லட்சம் ரூபாய் வரை வட்டி தொகை கிடைக்கும் வகையிலான திட்டம் உள்ளது. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.

ஒருவர் ஒரு கூட்டு கணக்கு வசதியும், இருவர் அல்லது மூன்று பேர் சேர்ந்து கூட்டு கணக்குகளையும் தொடங்க முடியும். மேலும் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெயர்களில் பெற்றோர்கள் nsc கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 7.7 சதவீதம் பட்டியில் 5 வருடங்களுக்குப் பிறகு 4,49,034 ரூபாய் வட்டி மட்டுமே கிடைக்கும். இதனால் உங்களின் முதலீட்ட தொகையுடன் சேர்த்து 5 வருடம் முடிவில் நீங்கள் மொத்தம் 14,49,034 ரூபாயாக பெறலாம்.