இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இதன் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து வகையான ஆவண சரிபார்ப்புகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ரேஷன் அட்டையில் உள்ள விவரங்கள் அனைத்தையும் முறையாக அப்டேட் செய்ய வேண்டும். அதன்படி ரேஷன் கார்டில் மொபைல் நம்பர் மற்றும் முகவரி என ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அதனை ஆன்லைன் மூலமாக மக்கள் செய்து முடிக்கலாம்.

அதற்கு முதலில் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx. என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை புதுப்பிக்க your registered mobile number என இருக்கும். இப்போது தேவையான விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்து ரேஷன் கார்டில் என்னை உள்ளிட வேண்டும். மேலும் வீட்டின் தலைவரின் பெயர் மற்றும் புதிய மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து சேமி என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது உங்களுடைய புதிய மொபைல் நம்பர் புதுப்பிக்கப்படும். அதனைப் போலவே மற்ற விவரங்களையும் நீங்கள் எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம்.