உங்களது அவசர தேவைக்கு பிஎப் கணக்கில் இருந்து ஈஸியாக ஆன்லைன் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் மாதம் வாங்கும் சம்பளத்தில் ஒரு முக்கியமான சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் உங்களின் அவசர தேவை உட்பட பல காரணங்களுக்காக வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாகவே பிஎஃப் தொகையை பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

அதற்கு முதலில் இபிஎஃப்ஓ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று லாகின் செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய பெயர் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து ஆன்லைன் உரிமை கோரலை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் விருப்பத்தை தேர்வு செய்து அதில் இருக்கும் தகவல்களை பதிவிட வேண்டும். அதில் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் விவரங்கள் மற்றும் பணம் எடுக்கும் திட்டம் ஆகியவற்றை பதிவிட வேண்டும். அதன் பின்னர் உங்களது கோரிக்கைகள் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் மூலம் அனுப்பப்படும். இது அங்கீகரிக்கப்படும் போது பணம் உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.