குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்தப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது. ஜூன் 18ம் தேதி நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வு மூலமாக 7,301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 18.5 லட்சம் பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-4 பதவிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில்,5,321 இளநிலை உதவியாளர், 3,377 தட்டச்சர், 1,079 சுருக்கெழுத்தர், 425 கிராம நிர்வாக அலுவலர், 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர் என மொத்தம் 10,292 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.