
தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் குரங்கு காய்ச்சல் கண்காணிப்பை தீவிர படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை அந்த நோய்க்கு இரண்டு பேர் பலியாகி உள்ள நிலையில் 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி மற்றும் ரத்தப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். பி சி ஆர் மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் குரங்கு காய்ச்சல் பாதிப்பை உறுதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.