தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதிக கன மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2,60,909 விவசாயிகளுக்கு ரூபாய் 201.67 கோடி நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  1,68,866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூபாய் 160.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

38,840 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூபாய் 41.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 18ஆம் தேதி வரலாறு காணாத அதிக கன மழைப்பொழிவு ஏற்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பயிர்கள் பாதிப்படைந்தது. நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.