பிரபல ஆஸ்திரேலிய மாடலான சியன்னா வீர் (23) மரணமடைந்தார். சியன்னா தனது தாய் நாடான ஆஸ்திரேலியாவில் உள்ள விண்ட்சர் போலோ மைதானத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி குதிரை சவாரி செய்யும் போது கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சியன்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு நடந்த ஆஸ்திரேலிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்ற சியன்னா இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.