மத்திய அமைச்சரவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி 11 லட்சத்து 72 ஆயிரத்து 240 ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது.

இவர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2029 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பினால் ரயில்வே ஊழியர்கள், பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெற இருக்கிறார்கள்.