
தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று முதல் சென்னை சென்ட்ரல் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
அதன்படி இன்று முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை இயங்கும். மேலும் அதன்படி இன்று இரவு 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 11.20 மணிக்கு நெல்லையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.