தமிழகத்தில் பருவ மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக சமீப காலமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் காய்கறிகளின் விலை குறைகிறது. அதன்படி நேச்சு சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி நேற்று 20 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 18 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதேபோன்று ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 18 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதன்பிறகு அவரைக்காய் கிலோ ரூ.5 வரையில் குறைந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கேரட் கிலோ 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 100 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும் விற்பனை ஆகிறது. மேலும் சௌசௌ கிலோ 20 ரூபாயிலிருந்து 18 ரூபாயாகவும், கொத்தமல்லி கட்டு 16 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும் குறைந்துள்ளது.