
பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு சவால் விடுவதை சட்ட அமைச்சர் ரகுபதி ஒரு அடிமை தொழிலாகக் கொண்டிருக்கிறார் என்றுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சமூக விரோத செயல்களுக்கு திமுக கொடி லைசென்ஸ் என்பதை ஒப்புக்கொண்ட போலீஸ், திமுக அரசின் போலீஸ், திமுக கொடி கட்டிய காரில் வந்து நள்ளிரவில் பெண்களின் மிரட்டியவரிடம் வற்புறுத்தி அவருடைய உறவினர்கள் அதிமுகவினரோடு தொடர்புடையவர்கள் என்று வாக்குமூலம் வாங்குவதும் சட்டத்திற்கு புறம்பாக தங்கள் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வதும், அதை வைத்து எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு சவால் விடுவதை சட்ட அமைச்சர் ரகுபதி ஒரு அடிமை தொழிலாகக் கொண்டிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் ஈடுபட்ட திமுக உடன் பிறப்பை திமுக அனுதாபி என்று சொல்லி முக்கிய குற்றவாளியான “யார் அந்த சார்” என்பவரை காப்பாற்ற துடிக்கும் கபட வேடதாரியை தலைமையாகக் கொண்ட கட்சி தான் திமுக. நாடகக் கும்பலின் துணை நடிகராக ரகுபதி போன்றவர்கள் வாய்வீரம் காட்டுவதை நிறுத்துவது அவர்களுடைய தலைமைக்கு நல்லது. இல்லை என்றால் குட்டி குரைத்து தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்