
பிரபல கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி. இவருக்கு 59 வயது ஆகும் நிலையில் திடீரென காலமானார். இவர் குட்டி புலி, ஜெயில், அநீதி மற்றும் குடும்பஸ்தன் ஆகிய படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில் அவருடைய மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.