
குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ரெமல் என பெயரிடப்பட்ட அந்த புயல் வங்கதேசம் மற்றும் மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த 26-ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடந்தது. இதனால் அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மிசோரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. பெரும்பாலான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானது.
இந்நிலையில் நிலைமை மெல்ல மெல்ல திரும்பி உள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதன் காரணமாக மேற்கு இம்பாலில் உள்ள நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.