சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய பனங்காடு கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மகள் ஜீவிதாவுக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வரும் நிலையில், மகன் நிதீஷ் அவருடைய பெரியப்பா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் தனியாக வீட்டில் இருந்த சுப்பிரமணியனுக்கு கலைவாணி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் கலைவாணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரமேஷ் என்ற கணவரும், நித்யஸ்ரீ என்ற மகளும் இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் ரமேஷுக்கு தெரிய வரவே அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தன் கணவர் மற்றும் மகளை பிரிந்து கலைவாணி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் சுப்ரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் பக்காளியூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறிய நிலையில் கலைவாணியின் மகளும் தன் தாயுடன் இருக்க ஆசைப்பட்டு அங்கு சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி சுப்ரமணியன் மது போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் கலைவாணி மற்றும் அவருடைய மகள் இருவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கலைவாணி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சுப்பிரமணியனை அடிக்க அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்துவிட்டார். இதனால் தன் மகளை அழைத்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த சமயத்தில் சுப்பிரமணியனின் தம்பி வீட்டிற்கு வரவே  அண்ணன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பாலகிருஷ்ணன் சங்ககிரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கலைவாணியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.