
குஜராத்தில் தமன் தாக்கூர் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் 73 வருட பாரம்பரியமான பழைய காரில் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார்.
இவர்கள் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு காரில் சென்றுள்ளனர். அதன்படி இவர்கள் 16 நாடுகள் வழியாக 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியாக சுமார் 2 1/2 மாதங்கள் வரை பயணம் செய்து லண்டனை அடைந்துள்ளனர். மேலும் இவர்கள் தங்களுடைய பயணம் வெற்றி அடைந்ததாக கூறி ஒரு வீடியோவையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு இணையதளவாசிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram