குங்குமப்பூ என்று கூறப்படும் சாஃப்ரன் பூக்கள் கடந்த 3000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. உலகின் மிக விலை உயர்ந்த நறுமணப் பொருளாகவும் மசாலாவாகவும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. பூ என்ற பொதுவாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது மகரந்தம் தான். ஒரு கிலோ மகரந்தத்தை உற்பத்தி செய்ய இரண்டு லட்சம் குங்குமப்பூக்களை பறிக்க வேண்டும். அதனால்தான் குங்குமப்பூவின் சந்தை மதிப்பு ஒரு கிலோ இரண்டு லட்சமாக உள்ளது. உலக அளவில் குங்குமப்பூவை அதிகமாக உற்பத்தி செய்யும் இரண்டாவது நிலமாக ஜம்மு காஷ்மீர் உள்ளது.