செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின்  பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடு. கட்சி மாநாடு. இது கூட்டணி கட்சி மாநாடு அல்ல. இது ஸ்டாலின் போல விருந்து சாப்பிட்டு வரும்  கட்சியில் இல்ல, இந்த கட்சி. புரிகிறதா ? தொண்டன் நிறைந்த கட்சி. தொண்டர்களால்…  தலைவர்களால் உருவான கட்சி.  தொண்டர்கள் தான் இங்கு தலைவர்கள். இங்கு  தலைவன்,  தொண்டன் அல்ல.

இது கட்சி சார்பாக நடத்துகின்ற மாநாடு.  கூட்டணி அல்ல,  முதல்ல தெரிஞ்சுக்கோங்க. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நடக்கின்ற மாநாடு. கூட்டணி கட்சி மாநாடு அல்ல. நல்லா சிந்தித்து பாருங்கள். கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இன்றைக்கு ஒரு பெரிய கூட்டத்தை நடத்துனாங்க. அதுக்கு பெயரை வச்சுட்டாங்க. ”இந்தியா” என்ற பெயர். அருமையான பெயர் ”இந்தியா”.  எல்லோரும் சேர்ந்து தான்  இந்தியா.

இவர்களுக்கு இந்தியா சொந்தம் இல்ல. இந்த பெயருக்கும்,  இவர்களுக்கும் சம்பந்தமும் கிடையாது. இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இந்த பெயர் வைப்பதற்கு உரிமையும்  கிடையாது. எல்லோருக்கும் சொந்தம். இந்தியா என்கிறது எல்லாருக்கும் சொந்தம்.  இந்தியா என்பது கிட்டத்தட்ட 140 கோடி மக்களுக்கும் சொந்தம். அந்த பெயரை போய்  வச்சி இருக்காங்க, அதே தப்பு என தெரிவித்தார்.