கோமாளி சீசன் 4இல் ஆரம்பத்திலிருந்து நடுவர்களை அசத்தி வந்த மைம் கோபி தான் டைட்டிலை ஜெயித்திருக்கிறார். இதனையடுத்து இரண்டாவது இடம் சிருஷ்டிக்கும் மூன்றாவது இடம் விசித்திராவுக்கும் கிடைத்தது. இதனை அடுத்து இந்த சீசன் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் போட்டியாளர்கள் மற்றும் பிரபலங்கள் எமோஷனலாக இந்த ஷோவை முடித்து வைத்துள்ளார்கள்.

இவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் பணத்தை இவர் தனக்கு என்று வைத்துக் கொள்ளாமல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு கொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். இவரின் இந்த செயலைப் பார்த்த அனைவரும் பாராட்டுகளை  தெரிவித்து வருகிறார்கள்