இங்கிலாந்து நாட்டில் கிளைட் நதியில் உல்லாச கப்பல் ஒன்றை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லும் போது இழுவை படகு ஒன்று தண்ணீருக்குள் கவிழ்ந்துள்ளது. இந்த படையில் குறைந்தபட்சம் இரண்டு பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படகு விபத்துக்குள்ளானதும் உடனடியாக அபாய எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது.

அதன் பின் உடனடியாக ஹெலன்ஸ் பார்க் ஆர்.என்.எல்.ஐ லைவ் படகு, மற்றும் போலீசார் மீட்பு படகுகள் மற்றும் பிற கண்காணிப்பு படகுகள் ஆகியவை இழுவை படகு கவிழ்ந்த இடத்திற்கு சென்று தண்ணீருக்குள் மூழ்கியவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.