வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமாக இருக்கும். ஆனால் சில பள்ளிகளில் பெற்றோர்களின் சம்மதம் இன்றி மாணவர்களை கட்டாயத்தின் பேரில் இந்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதனை தடுக்கும் பொருட்டு மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி சுற்றறிக்கை ஒன்றை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் இன்றி மாணவ மாணவிகளை கிறிஸ்மஸ் நிகழ்ச்சிக்காக சாண்டா கிளாஸ் ஆடை அணிய வைப்பது கிறிஸ்துமஸ் மரம் தயார் செய்ய வைப்பதோ கூடாது.

புகார் ஏதேனும் வந்தால் குறிப்பிட்ட பள்ளிக்கூடத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில் இதற்கு முந்தைய காலகட்டங்களில் பெற்றோர்களின் சம்மந்தமில்லாமல் குழந்தைகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சர்ச்சையை தடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதோடு சம்பவம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை மேற்கொள்வதை விட இது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.