இன்றைய காலகட்டத்தில் சம்பளம் வாங்க கூடியவர்கள் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றன. உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டுமென்றால் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரெடிட் கார்டு உதவியாக இருக்கும். இதில் பல சலுகைகள் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளுடன் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த கிரெடிட் கார்டு பெற போர்ட்டலுக்கு சென்று அதில் RuPay Millennial, Rakshak RuPay Select, RuPay Select, RuPay Platinum, Visa Platinum ஆகிய ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களுடைய வசதியை தேர்வு செய்து ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

Rupay millennial கார்டு என்பது 399 ரூபாய் மற்றும் வருடாந்திர கட்டணமாக 999 ரூபாய் கொண்ட சிறப்பு கார்டாகும். ரேஷன் கார்டு, கரண்ட் பில், தொலைபேசி கட்டண பில், வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை முகவரி சான்றாக இதற்கு பயன்படுத்தலாம். அதனைப் போலவே அடையாளச் சான்றாக பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும். இதற்கு சம்பள ரசீது, படிவம் 16 மற்றும் ஐடிஆர் போன்ற ஆவணங்களும் தேவைப்படும். இதனை கொடுத்து நீங்கள் கிரெடிட் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.