சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் போலீஸ் கமிஷ்னர் சந்திப்பாய் ரத்தோரிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சிலர் செல்போன் மூலமாக என்னை தொடர்பு கொண்டு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினர். அதனை நம்பி வங்கி பண பரிவர்த்தனை மூலம் அவர்களுக்கு 3 1/3 கோடி ரூபாய் பணத்தை அனுப்பினேன். அந்த பணத்தை அவர்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி மோசடி செய்துவிட்டனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மோசடி கும்பல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் கொல்கத்தாவுக்கு சென்று ரூபா ஜா, ரமேஷ் சோனி, விஜய் சோனி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இதில் ரூபா ஜா தான் வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.