பாகிஸ்தான்

. 31 வயதான இவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் சஜித் கான் பாகிஸ்தான் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அதில் செய்தியாளர் அவரிடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அதில் நீங்கள் கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சஜித் கான், “கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் கேங்க்ஸ்டர் ஆகி இருப்பேன்” என்று பதில் அளித்தார். இந்த கருத்தானது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.