பிரபல ஓடிடி நிறுவனமான disney+ hotstar கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகளுக்கு சில புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மொபைல் பயனர்களுக்கு மேக்ஸ் வியூ அம்சத்தை கொண்டு வருகிறது. இது செங்குத்து முறையில் கிரிக்கெட்டை பார்க்க உங்களை அனுமதிக்கும் எனவும் லைவ் பீட் டேப், ஸ்கோர் கார்டு டேப் மற்றும் ஏ ஐ அடிப்படையிலான பில்டர்கள் மற்றும் கமிங்சூன் ட்ரே ஆகியவையும் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.