கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகக் கொண்டாடப்பட்ட ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார்.
பார்படாஸில் 1936-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்த இவர், இடது கை பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்துத் துறைகளிலும் அசாதாரணத் திறமையை வெளிப்படுத்தி, ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தார்.
தனது காலத்தின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவராகவும் அறியப்பட்ட இவர், மைதானத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் காட்டிய அந்த அபாரமான பன்முகத்தன்மை, இவரை உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடிக்க வைத்தது. இவரின் மறைவு கிரிக்கெட் உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
