மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பப்பு மனு ரத்தோட் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேஷ்மா ‌(27) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரத்தோட் ரேஷ்மா மீது மிகவும் கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் தலைக்கேறிய கணவன் தன் மனைவியை கிரானைட் வெட்டும் இயந்திரத்தால் தலையில் ஓங்கி அடித்தார். அதோடு வெறி தீர தீர ஒரு கயிறை எடுத்து தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்றார்.

இந்த சம்பவத்தில் அவரது மனைவி சம்பவ இடத்தில் துடி துடித்து பலியான நிலையில் பின்னர் அவர் தானாகவே சென்று போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். பின்னர் போலீசார் அவரை கைது செய்த நிலையில் வீட்டிற்கு வந்து ரேஷ்மாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.