
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அசர்கேடா கிராமத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 12 நாட்களே ஆன ஒரு பிறந்த பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் சுமார் 1000 வீடுகளில் புதிதாக பிறந்த குழந்தைகள் குறித்து தேடினர்.
அந்த விசாரணையில் சதீர்பவார்-பூஜா தம்பதியினர் குழந்தைகள் என்பது தெரிய வந்தது. அவர்கள் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் வேண்டாம் என்று நினைத்து அந்த குழந்தையை கொன்று கிணற்றில் வீசி உள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருப்பதால் இந்த பெண் குழந்தையை வளர்க்க மனம் இன்றி கொலை செய்ததாக கூறினர். மேலும் அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.