
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த் பல சுவாரசியமான விஷயங்களை பேசி இருந்தார். குறிப்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளான காவியா கலாநிதி மாறன் குறித்து அவர் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நல்ல வீரர்களை போடுங்க. போட்டி நடைபெறும் போதெல்லாம் காவியாவின் ரியாக்ஷனை பார்த்தால் நமக்கே டென்ஷன் பிபி ஏறுது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.
அதாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா கலாநிதிமாறன். ஹைதராபாத் அணி விளையாடும் போதெல்லாம் காவியாவின் எக்ஸ்பிரஷன்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த அணி ஒவ்வொரு போட்டியிலும் புதுப்புது சாதனைகளை படைத்து வருவதால் தற்போது ரஜினிகாந்த் பேச்சை தொடர்ந்து ஹைதராபாத் அணி சிறப்பான முறையில் விளையாடி வருவதாக அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ரஜினிகாந்த் பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
Once a Wise Man💥said
His name is Thalaivar @rajinikanth 🔥
Kala Sir please take a good Team in IPL ✅ REST is History 💯🥵 #Thalaivar171 🥳😱pic.twitter.com/KUsYMYBX7p— Dr.Aazim Kassi〽️ (@AazimKassim) April 15, 2024