தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குட் பேட்  அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.

இந்த படத்தை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் எஸ்.ஜே சூர்யாவும் வில்லனாக நடிக்க இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.