தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் காலியாக உள்ளன. இதனைத் தவிர பிடெக் படிப்புகளுக்கு ஏராளமான இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

நடப்பு ஆண்டில் அதற்கான இணைய வழி விண்ணப்பதிவு நடைபெற்ற கடந்த ஜூலை 26 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும் பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு மற்றும் இணைய வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.