நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஆட்சி சக்கரம் சுழல்வதற்கு அரசு ஊழியர்களின் கைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் வேகம் அதிகரிக்கும். இதனை கருதி நடப்பு ஆண்டில் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 55 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் தொடங்கி பல்வேறு நகரங்களில் உணவு மற்றும் பல சரக்கு உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. சேவை வழங்குபவர்களின் ஒட்டுமொத்த நலன்களை காக்கும் விதமாக அவர்களுக்காக தனியாக நலவாரியம் உருவாக்கப்படும். இந்திய விடுதலைப் போராட்ட ஜாக்கிகளுக்கு மாத ஓய்வூதியம் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் குடும்ப ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு குடும்ப ஓய்வுதியும் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.