கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. குறிப்பாக நிதீஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு தான் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று பாஜக ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நிதிஷ்குமார் பிரதமர் மோடியின் காலில் விழ முயன்றார்.

அவரை உடனடியாக பிரதமர் மோடி கருத்து நிறுத்தி கையை குழுக்கி கட்டி அணைத்துக் கொண்டார். இதோடு இந்த வருடத்தில் மட்டும் 3 முறை பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்க நிதீஷ்குமார் முயன்றுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.