
சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7610 ரூபாயாகவும், ஒரு சவரன் 60 ஆயிரத்து 880 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 98 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.