சென்னையில் இன்று (செப்டம்பர் 12) காலை முதல் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமாக காவல்துறை அல்லது துணை ராணுவப் படையினருடன் இணைந்து சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள், இந்த முறை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒரே சமயம் புறப்பட்டு, பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
திடீரென நடத்தப்பட்ட இந்த சோதனை, அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோதனைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
