தமிழக அரசு கொண்டு வந்துள்ள “ரூ.10 காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு” எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் மாநிலம் தழுவிய அளவில் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் காலி பாட்டில்களை வாங்குவதால் கடைகளில் கடுமையான இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு, பாட்டில்கள் உடைந்து சேதமடைவதாகவும், இதனால் ஊழியர்களுக்கு வேலைப் பளுவும் மன உளைச்சலும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இத்திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை 12-க்கும் மேற்பட்ட கூட்டுத் தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

அதேபோல, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் 140-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் ஊழியர்கள் முழுமையாகப் புறக்கணித்து மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், மதுக்கடைகள் அடைக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.