அதிமுக கட்சியில் மீண்டும் ஓபிஎஸ் இணைவாரா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பலர் பிரிந்து சென்ற நிலையில் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய நிலையில் அவரையும் கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.
அதே நேரத்தில் அதிமுக ஒன்றுசேரும் என்று பிரிந்து சென்றவர்கள் கூறிவரும் நிலையில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் அதிமுக இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
அதாவது அதிமுக இணைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறினார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் காலம் முடிந்து விட்டது என்று பதிலளித்தார். மேலும் இதன் மூலமும் பன்னீர்செல்வத்தை அவர் மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
