சமூக ஊடகங்களில் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகள் அடிக்கடி வைரலாகும் நிலையில், தற்போது கேங்ஸ்டர் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு பிரீ-வெட்டிங் ஷூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூடியூப்பில் வெளியிடப்பட்ட இந்த 1 நிமிடம் 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், மணமகன் மற்றும் மணமகள் வெள்ளை நிற SUV களின் வரிசையில் வருவது ஹாலிவுட் திரைப்பட காட்சியைப் போலவே உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் முதலில் மூன்று வெள்ளை SUV கள் வேகமாக சாலையில் வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதில், மணமகன் தனது நண்பர்களுடன் வருகிறார். பின்னர் மற்றொரு SUV யில் மணமகளும் தனது நண்பர்களுடன் வருகிறார் . அண்டர்பாஸில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியில், மணமகன் பிரீஃப்கேஸை மணமகளுக்கு கொடுக்கிறார்.

அதைத் திறந்தபோது, இரண்டு ரோஜாக்களும் நிச்சயதார்த்த மோதிரமும் இருப்பது காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மெதுவாக எடுக்கப்பட்ட அந்த காட்சிகள் வீடியோவின் சிறப்பை அதிகரித்துள்ளன.

இந்த பிரம்மாண்டமான காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், “இது சாதாரணமான பிரீ-வெட்டிங் ஷூட் அல்ல, முழுக்க திரைப்படக் காட்சியைப் போலவே உள்ளது” என்று கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் இதை மிகவும் ஆக்கப்பூர்வமானதும் தனித்துவமானதுமாகக் குறிப்பிட, சிலர் இது திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பின் புதிய பரிமாணமாக மாறியுள்ளதாகக் கூறியுள்ளனர். தற்போது வைரலாகும் இந்த வீடியோ, மணமக்கள் பிரீ-வெட்டிங் ஷூட்களுக்கு புதிய டிரெண்டாக அமைந்துள்ளது.