மதுரை மாவட்டம் கள்ளிகுடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த சிறுவன் சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் பெற்றோருக்கு தெரிய வந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.