உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை காரணமாக குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 60% அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 163 மருத்துவ ஆய்வுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாக குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என கண்டறிந்துள்ளனர்.