‘நீண்ட நாட்களாக கார் கடனுக்கு அப்ளை செய்து அதற்கு நிராகரிப்பு வந்தால் அதற்கு சில காரணங்கள் இருக்கும் . அதில் மிக முக்கியமான ஒன்றுதான் சிபில் ஸ்கோர். கார் கடனுக்கான குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் கடன் வழங்கினரின் கொள்கைகள் மற்றும் வருமானம், நடப்பு கடன், வேலை தன்மை மற்றும் முன்பணம் செலுத்தும் அளவு போன்ற பல காரணிகளை பொறுத்து மாறுபடும். இது ஒரு பொதுவான விதி இல்லை என்றாலும் பெரும்பாலான கடன் வழங்குனர்கள் கார் கடனுக்கு தகுதி பெற 700க்கும் அதிகமான சிபில் ஸ்கோர் மதிப்பினை கொண்ட கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்க விரும்புகிறார்கள்.

அதிக கிரிடிட் ஸ்கோர் வைத்திருப்பது கார் கடனுக்கான குறைந்த வட்டி விகிதத்தை பெற உதவும். இது கடன் காலத்தின் போது பணத்தை சேமிக்க உதவும். ஆனால் அதிக கிரிடிட் ஸ்கொருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கடன் வழங்குனர்கள் கடன் விண்ணப்பங்களை மதிப்பிடும்போது சிபில் ஸ்கோரை மட்டும் கணக்கில் எடுக்காது வருமானம் , வேலை, நிலைத்தன்மை, கடன் வருமான விகிதம் மற்றும் கடனை தீர்மானிக்க பெற காரணங்களையும் மதிப்பீடு செய்வார்கள்.

சிபில் ஸ்கோர் கிரெடிட் ஸ்கோர் 200க்கும் குறைவாக இருந்தால் இன்னும் கார் கடன் தகுதி பெறலாம். ஆனால் அதிக வட்டி விகிதங்கள் அல்லது கடுமையான கடன் விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் . இது போன்ற சமயத்தில் கார் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக சரியான நேரத்தில் பணத்தை செலுத்தி கடன் நிலுவைத் தொகையை குறைத்து ஆரோக்கியமான கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை பராமரிப்பதன் மூலமாக கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முடியும்.