தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வசந்த் கஞ்ச் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக SUV கார் ஒன்று வந்தது. இந்த காரை 2 டிராபிக் காவலர்களும் நிறுத்த முயற்சித்த நிலையில் அந்த கார் நிற்காமல் போக முயற்சி செய்தது.

இதன் காரணமாக இருவரும் சேர்ந்து கார் பானட்டை பிடித்துக் கொண்டனர். ஆனாலும் ஓட்டுநர் காரை நிறுத்தாததால் அவர்கள் சாலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் சிறிது தூரம் சென்ற பிறகு தூக்கி வீசப்பட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தப்பி ஓடிய கார் ஓட்டுநரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.