பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சிங்கங்கள் என்றாலே ஜாலியாக விளையாடக்கூடிய ஒரு விலங்கு. இவை  கூட்டமாக இருக்கும் பொழுது சிங்கக் கூட்டத்திற்கு உள்ளாகவே ஓடி ஆடி படுத்து உருண்டு விளையாடும். இதை பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிங்கங்கள் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் வனப்பகுதியில் சுற்றுலா சென்றவர்கள் காட்டு வழியில் வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது வழியிலேயே படுத்திருந்த சிங்கங்கள் இரண்டும் ஜாலியாக விளையாடி கொண்டிருக்கிறது. உடனே வாகனத்தை நிறுத்தியை சுற்றுலா பயணிகள் சிங்கங்களுக்கு மிக பக்கத்தில் இருந்து அவற்றின்   ரொமான்ஸை பார்த்து ரசித்துள்ளார்கள். அப்பொழுது திடீரென்று இன்னொரு சிங்கம் ஓடி வந்து அந்த இரண்டு சிங்கங்களோட இணைந்து விளையாடுகிறது. இந்த வீடியோ 2.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது.