அண்மையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். மேலும் அழைப்பு விடுக்கும் கட்சிகளில் இணைய போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவர் சந்தித்திருந்தார். இதுகுறித்து காயத்ரி ரகுராம் மரியாதை நிமித்தமாக அற்புதமான சந்திப்பு இது என்று பதிவிட்டு இருந்தார்.

இதனால் காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய உள்ளாரா? என்று பல்வேறு தகவலும் பரவி வந்த நிலையில் இதுகுறித்து பேசிய திருமாவளவன், காயத்ரி ரகுராமிற்கு விசிக மீது தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை. தவறான தகவல்களின் அடிப்படையிலேயே எதிர்வினை ஆற்றினார். இந்த சந்திப்பு தோழமை அடிப்படையிலான சந்திப்பு என்றும், சக்தி யாத்திரைக்கு ஆதரவு கோரினார் என்றும் தெரிவித்துள்ளார்.