ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறுவார் என்ற ரிப்போர்ட் தற்போது சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஈரோடு கிழக்கில் சர்வே எடுத்துள்ளதாகவும் அந்த ரிப்போர்ட் தற்போது எடப்பாடி கைகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த ரிப்போர்ட்டின் படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,25,000 வாக்குகள் வரை பெற்று வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு 35 ஆயிரம் வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா 15,000 வாக்குகளும், தேமுதிக கட்சியின் வேட்பாளர் ஆனந்த் 7000 வாக்குகளும் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தோல்வியை சந்தித்தாலும் அதிக வாக்குகள் பெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டுகிறார். ஒருவேளை குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக தோல்வியை தழுவினால் இதை பயன்படுத்தி ஓபிஎஸ் கட்சிக்குள் வந்துவிடுவார் என்பதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கில் ஸ்வீட் பாக்ஸ் விநியோகத்தை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.